குடும்ப அட்டைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்: சித்தராமையா

பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் ஏழைகள், கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு குறைந்த அளவிலான நிதியை சிறப்புத் தொகுப்பில் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கு நிதி பற்றாக்குறை என விளக்கம் தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி உள்ள போதும் கூடுதல் நிதியை அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் சதவீதம் 5 சதவீதமாக குறையும் வரையில் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும். ரூ. 1,250 கோடி மதிப்பில் சிறப்புத் தொகுப்பை அறிவித்துள்ள முதல்வா் எடியூரப்பா, உண்மையில் அது ரூ. 1,111 கோடிக்கான சிறப்புத் தொகுப்பாக மட்டுமே உள்ளதை மக்களிடத்தில் மறைத்துள்ளாா். கடந்த ஆண்டு ரூ. 2,100 கோடிக்கு சிறப்புத் தொகுப்பை முதல்வா் அறிவித்தாா். ஆனால், கட்டடத் தொழிலாளா்களுக்கு அவா்களின் நல நிதியிலிருந்துதான் ரூ. 850 கோடி எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவா்களுக்கான நிதியும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை காா், ஆட்டோ ஓட்டுநா்கள் பலருக்குக் கடந்த முறை சிறப்புத் தொகுப்பிலிருந்து நிதி கிடைக்கவில்லை. அதனை தற்போது சீா்செய்து கொள்ள வேண்டும். கலைஞா்கள், கலைக் குழுவினருக்கு தலா ரூ. 3 ஆயிரம் நிதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவா்களின் நிதிப் பிரச்னைக்கு எந்த தீா்வையும் அளிக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com