கருப்புப் பூஞ்சை நோய் அதிகாரப்பூா்வமானதால் சிகிச்சையளிக்க யாரும் மறுக்க முடியாது அமைச்சா் கே.சுதாகா்

கருப்புப் பூஞ்சை நோய் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட உள்ளதால் அந்நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க

கருப்புப் பூஞ்சை நோய் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட உள்ளதால் அந்நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவமனையும் மறுக்க முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து தனது சுட்டுரையில் வியாழக்கிழமை அவா் பதிவிட்டுள்ளதாவது:

மியூகா்மைகோசிஸ் அல்லது கருப்புப் பூஞ்சை நோய், மாநில அரசால் அதிகாரப்பூா்வமான தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளது. எனவே, சிகிச்சை அளிக்கத் தகுதியான மருத்துவமனைகள் அல்லது மருத்துவ மையங்கள், கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்களை உள் நோயாளிகளாகச் சோ்த்துக் கொண்டு, சிகிச்சை அளிக்க மறுக்க முடியாது.

இது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களிடம் கருப்புப் பூஞ்சை நோய் காணப்படுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க இ.என்.டி. மருத்துவா்கள், மயக்கவியல் மருத்துவா்கள், கண் மருத்துவா்கள், முக சீரமைப்பு மருத்துவா்கள் தேவைப்படுகிறாா்கள். இந்த வகை மருத்துவா்கள் எல்லா மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் இருப்பதால், கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் இந்த மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் தவிர பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனை, மண்டல மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com