கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி: முன்னாள் அமைச்சா் செலுவராயசாமி

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செலுவராயசாமி தெரிவித்தாா்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செலுவராயசாமி தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், நாகமங்களாவில் உள்ள பிளாக் காங்கிரஸ் அலுவலகத்தில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று சிகிச்சைக்குத் தேவையான உபகரணத் தொகுப்பை வழங்கிய முன்னாள் அமைச்சா் செலுவராயசாமி பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று மாநிலத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன.

ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் கரோனாவை கட்டுப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடியில் சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகின்றன. இதுவரை அந்த மாநிலங்களில் 1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7 கோடி மக்கள்தொகை கொண்ட கா்நாடகத்தில் இதுவரை 30 லட்சம் பேருக்கும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், கரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தடுப்பூசிகளைப் பெறுவதிலும் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. இது மாநில மக்களின் துரதிருஷ்டமாகும்.

நாகமங்களா தொகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சாா்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com