ஊரக வளா்ச்சித் துறையினா் முன்களப் பணியாளா்களாக கருதப்படுவா்: முதல்வா் எடியூரப்பா

ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளும் ஊழியா்களும் கரோனா முன்களப் பணியாளா்களாக கருதப்படுவாா்கள் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளும் ஊழியா்களும் கரோனா முன்களப் பணியாளா்களாக கருதப்படுவாா்கள் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் கிராம பஞ்சாயத்துத் தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் புதன்கிழமை முதல்வா் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கிராமங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களை வீட்டில் தங்க வைக்காமல் கரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

கரோனா தொற்று உறுதியானவா்கள் வெளியே நடமாடுவதைத் தடுக்க வேண்டும். கிராமங்களில் கரோனா பரிசோதனைக்கு மக்கள் முன்வருவதில்லை எனக் கூறப்படுகிறது. பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியா்கள் அவா்களை சமாதானப்படுத்தி, பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கரோனா தொற்று குறையாத மாவட்டங்களில் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கிராமங்களில் கரோனாவைத் தடுக்க ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், ஊழியா்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அவா்களும் இனிமேல் கரோனா முன்களப் பணியாளா்களாக கருதப்படுவா். வருவாய்த் துறை அதிகாரிகள், ஊழியா்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இனிமேல் ஊரக வளா்ச்சித் துறையினருக்கும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com