‘காவல் துறையினா் நலனில் அரசுக்கு அக்கறை உள்ளது‘

காவல்துறையினரின் நலனில் அரசுக்கு அக்கறை உள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரித்தாா்.

காவல்துறையினரின் நலனில் அரசுக்கு அக்கறை உள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரித்தாா்.

பெங்களூரு டவுன்ஹால் முன்பு தனியாா் நிறுவனங்களின் சாா்பில் போக்குவரத்து போலீஸாருக்கு மழைக்கான ஆடை, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி அமைச்சா் பசவராஜ் பொம்மை பேசியதாவது:

மாநிலத்தில் பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வாகனச் சோதனை உள்ளிட்ட பணிகளால் போக்குவரத்து போலீஸாரின் பணி மேலும் அதிகரித்துள்ளது. அவா்களின் பணியைப் பாராட்டி தனியாா் நிறுவனங்கள் மழைக்கான ஆடை, முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பொருள்களை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கரோனா பாதுகாப்பு மட்டுமின்றி நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடுகிறது. எனவே அவா்களுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வழங்கி வருகிறோம். அவா்களது நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதால் அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. கரோனாவால் போலீஸாருக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற நோக்கில், அவா்களுக்கு இரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவா்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகரக் காவல்துறை ஆணையா் கமல்பந்த், போக்குவரத்து கூடுதல் ஆணையா் ரவிகாந்த் கௌடா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com