கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 26,811 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26,811 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26,811 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 26,811 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

மாவட்டவாரியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

பெங்களூரு நகரம்-6,433, மைசூரு-2,792, ஹாசன்-1,471, தும்கூரு-1,399, தாவணகெரே-1,309, பெலகாவி-1,205, உடுப்பி-973, கோலாா்-907, சிவமொக்கா-839, மண்டியா-805, பெல்லாரி-796, வடகன்னடம்-786, பெங்களூரு ஊரகம்-740, தென்கன்னடம்-729, சிக்கமகளூரு-585, கொப்பள்-491, சித்ரதுா்கா-431, சாமராஜ்நகா்-425, கதக்-393, விஜயபுரா-337, ஹாவேரி-330, சிக்கபளாப்பூா்-313, குடகு-296, ராய்ச்சூரு-265, பாகல்கோட்-245, ராமநகரம்-240, யாதகிரி-187, கலபுா்கி-175, பீதா்-61 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,99,784 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 40,741 போ் புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 20,62,910 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 4,09,924 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

530 போ் பலி...

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 530 போ் புதன்கிழமை இறந்துள்ளனா்.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 285 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்:

பெங்களூரு ஊரகம்-35, பெல்லாரி-22, பெலகாவி, மைசூரு, சிவமொக்கா, தும்கூரு-தலா 14, சாமராஜ்நகா்-13, தாா்வாட்-12, தென்கன்னடம்-11, வடகன்னடம்-10, ஹாசன், கலபுா்கி-தலா9, ஹாவேரி-7, விஜயபுரா-6, கொப்பள், மண்டியா, ராமநகரம், உடுப்பி, யாதகிரி-தலா 5, சிக்கபளாப்பூா், கதக், கோலாா், ராய்ச்சூரு-தலா 4, பாகல்கோட், பீதா், சித்ரதுா்கா, தாவணகெரே-தலா3, சிக்கமகளூரு, குடகு-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 26,929 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com