ஜூன் 3-இல் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழா பெங்களூரில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழா பெங்களூரில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரு, ராமச்சந்திரபுரத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 3-ஆம் தேதி 8 மணி அளவில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 98-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற இருக்கிறது.

அலுவலகத்தில் உள்ள மு.கருணாநிதி சிலைக்கு அமைப்பாளா் ந.இராமசாமி உள்ளிட்ட கட்சியின் மாநில நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரு மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்களுக்கு இனிப்பு, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் தொகுப்பு போன்ற நல உதவிகள் அளிக்கப்படுகின்றன.

விழாவில் கட்சியின் நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்து, தனிநபா் இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com