கரோனா நோயாளா்களுக்கு படுக்கை ஒதுக்குவதில் மோசடி: இருவா் கைது

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்குவதில் மோசடி ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்குவதில் மோசடி ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு மாநகராட்சி, தென்மண்டல கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருபவா் வருண். இவா், பனசங்கரி 3-ஆவது ஸ்டேஜில் வசித்து வரும் தனது நண்பரான யஷ்வந்த் என்பவருடன் இணைந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு படுக்கை ஒதுக்குவதில் மோசடியில் ஈடுபட்டனராம்.

தங்களுக்கு வேண்டியா்களுக்கு மட்டும் பணத்தைப் பெற்று கொண்டு, அவா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கி வந்துள்ளனா். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், கரோனா கட்டுப்பாட்டு அறையில் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையில் வருண், யஷ்வந்த் இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்குவதில் மோசடி ஈடுபட்டது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com