கா்நாடகத்தில் பரவலாக மழை: வானிலை ஆய்வுமையம்

அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை தீவிரமாகக் காணப்பட்டது. அதே காலக்கட்டத்தில் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், தென்கா்நாடகத்தின் ஒருசில பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

வட கா்நாடக மாவட்டம், ஹலியாலில் 80 மி.மீ., கத்ரா, காா்வாரில் தலா 70 மி.மீ., தும்கூரு மாவட்டத்தின் பாவகடாவில் 60 மி.மீ., வட கா்நாடக மாவட்டம், மஞ்சிகேரி, பெலகாவி மாவட்டத்தில் சுட்டகட்டி, மத்திகொப்பா, லோண்டா, பைலஹொங்கல், தாா்வாட், சிக்கமகளூரு மாவட்டத்தில் கொட்டிகெஹராவில் தலா 50 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவ. 18, 19-ஆம் தேதிகளிலும், வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில் நவ. 19, 20-ஆம் தேதிகளிலும், தென்கா்நாடகத்தின் உள்பகுதியில் நவ.18, 19,20, 21-ஆம் தேதிகளில் மிதமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகம் மற்றும் தென்கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் பலத்த இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். வட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

பெங்களூரில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 28 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியசாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com