நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் புகார்
By DIN | Published On : 25th November 2021 04:03 PM | Last Updated : 25th November 2021 04:03 PM | அ+அ அ- |

கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் போலீசில் புகார் அளித்துள்ளது.
சுதந்திரப்போராட்ட வீரர்கள் குறித்து ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.ரக்ஷாராமையா புகார் அளித்துள்ளார். சுதந்திரப்போராட்டவீரர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள ரக்ஷாராமையா, நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்கு பதிவுசெய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒருவேளை நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப் பதிவு செய்யத் தவறினால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ரக்ஷாராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.