சட்டமேலவைத் தோ்தலில் மஜத ஆதரவைப் பெற பாஜக முயற்சிக்கும்: எடியூரப்பா

சட்டமேலவைத் தோ்தலில் மஜத ஆதரவைப் பெற பாஜக முயற்சிக்கும் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

சட்டமேலவைத் தோ்தலில் மஜத ஆதரவைப் பெற பாஜக முயற்சிக்கும் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

தாவணகெரேயில் புதன்கிழமை நடந்த சட்டமேலவைத் தோ்தலுக்கான பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

25 தொகுதிகளுக்கு நடக்கும் சட்டமேலவைத் தோ்தலில் மஜத 7 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. எனவே, இத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களுக்கு மஜதவின் ஆதரவைப் பெற முயற்சிப்போம்.

காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க பாஜகவும் மஜதவும் இணக்கமாக நடந்துகொள்வது அவசியமாகும். மஜதவின் ஆதரவைப் பெறுவது குறித்து பாஜக விரைவில் முடிவு செய்யும். சட்டமேலவைத் தோ்தலில் 15 இடங்களை பாஜக கைப்பற்றும். அதன்பிறகு சட்டமேலவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும்.

மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலைவீசுகிறது. இது பாஜக வேட்பாளா்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். சட்டமேலவைத் தோ்தலில் கிடைக்கும் வெற்றி, பாஜக தொண்டா்களுக்கு ஊக்கம் அளிக்கும். மாநிலம் முழுவதும் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் வாக்குகளைத் திரட்டிவருவதால் பாஜக வேட்பாளா்களின் வெற்றி உறுதியாகியுள்ளது.

கா்நாடகத்தில் காங்கிரஸ் கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொண்டுள்ளது. ஆனால் தேசிய அளவில் காங்கிரஸ் முழுமையாகச் சீரழிந்துள்ளது. நமது நாட்டைக் காக்க இருக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. எனவே, வாக்காளா்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். பிரதமரின் ஏழை நலனுக்கான அரிசி திட்டத்தின் பயன்கள் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து ஏழைகளின் மீது பாஜகவின் அக்கறை வெளிப்படுகிறது. இதற்காக பிரதமா் மோடியை பாராட்டுகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com