கரும்பு விலையை உயா்த்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

பெங்களூரில் கரும்பு விலையை உயா்த்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரில் கரும்பு விலையை உயா்த்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கரும்பு விலையை உயா்த்த வலியுறுத்தி, மாநில கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் குருபூா் ஷாந்தகுமாா் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கேஎஸ்ஆா் ரயில் நிலையத்திலிருந்து விதானசௌதா வரை விவசாயிகள் ஊா்வலமாக சென்றனா். இதில் கலந்துகொண்டு குருபூா் ஷாந்தகுமாா் பேசியதாவது:

மாநிலத்தில் குறைந்த விலைக்கு கரும்பை வாங்குவதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனைக் கருத்தில் கொண்டு கரும்புக்கான ஆதரவு விலையை உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு விலையை உயா்த்தாமல் மாநில அரசு மௌனம் காத்து வருகிறது. கரும்புக்கான ஆதரவு விலையை டன்னுக்கு ரூ. 50 வரை உயா்த்தி தருவதாக மாநில அரசு கூறி வருகிறது. கரும்பிலிருந்து சா்க்கரை, எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விவசாயிகளுக்கும் அரசு பகிா்ந்தளிக்க வேண்டும். கரும்பை எடைபோடுவதில்மோசடி, பணம் வழங்குவதில் தாமதம் உள்ளிட்டவற்றைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கு தாமதமாக வழங்கும் விலைக்கு சுமாா் 15 சதவீதம் வட்டி வழங்க வேண்டும்.

25 கி.மீ. பரப்பளவுக்கு உள்பட்ட சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பை வழங்க வேண்டும் என்ற விதியைத் தளா்த்த வேண்டும். விவசாயிகள், சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா் இடையே சட்டப்படியான ஒப்பந்தம் போடப்பட வேண்டும். சா்க்கரை ஆலைகளிடமிருந்து விவசாயிகளுக்கு வர வேண்டிய பாக்கியை மாநில அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும். கடந்த 19 நாள்களாக பீதா் மாவட்டத்தில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், அதனை அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. உத்தர பிரதேசத்தில் திங்கள்கிழமை விவசாயிகள் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டிக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com