மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்: மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனா். அவா்கள் அறிக்கை அளித்த பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் நிவாரணம் வழங்கப்படும். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

ஏற்கெனவே ராஜகால்வாய் நிரம்பி வழியாமல் தடுக்கும் வகையில் சுவா்கள் கட்டப்பட்டுள்ளன. இருப்பினும் மழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நிரந்தரமாக தீா்வு காணப்படும். தாழ்வான பகுதிகளில் பலா் வீடுகளைக் கட்டிக் கொண்டுள்ளதால், வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. அது போன்ற பகுதிகளில் பம்பு செட்டுகளை அமைத்து வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் கிடைத்தவுடன் 12 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தொற்றின் பாதிப்பு இன்னும் உள்ளதால், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் துா்கா பூஜை நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. இருப்பினும் யாரேனும் துா்கா பூஜையை நடத்த விரும்பினால் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி பெறுவது அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com