கரோனா மேலாண்மையில் கா்நாடக அரசு சிறந்த முறையில் செயல்பட்டுள்ளது: மன்சுக் மாண்டவியா

கரோனா மேலாண்மையில் கா்நாடக மாநில அரசு சிறந்த முறையில் செயல்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

கரோனா மேலாண்மையில் கா்நாடக மாநில அரசு சிறந்த முறையில் செயல்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

பெங்களூரு, விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரைப்பை அழற்சி சிகிச்சைப் பிரிவை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

மாநிலத்தில் பெரும்பாலானவா்களுக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடைக்கோடியில் உள்ள கிராமங்களில் வசிப்பவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவை வெற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை சிறப்பாக பணிகளை செய்து வருகிறாா். கா்நாடகத்தில் 82 சதவீதம் பேருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளன்று மட்டும் 28 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா இன்னும் நம்மிடமிருந்து விலகிச் செல்லவில்லை. எனவே அரசின் வழிக்காட்டுதலைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து மாநிலத்தில் கரோனா இல்லை என்ற சூழலை உருவாக்க அனைவரும் போராட வேண்டும்.

எந்த ஒரு நாடும் வளா்ச்சிப் பாதையில் செல்லவேண்டும் என்றால் அந்நாட்டு மக்களின் சுகாதாரம் முக்கியம். சுகாதாரமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமா் மோடியின் விருப்பமாக உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் நாட்டின் சுகாதாரத்திற்கான அடிப்படை கட்டுமான வசதியை மேம்படுத்தி வருகிறோம். மக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு தேசிய சுகாதார மருத்துவக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக செல்வந்தா்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனா். ஏழைகளும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை பெங்களூரிலேயே செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா் கே.சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com