மனநல மருத்துவ பாடத் திட்டத்தில் இந்திய பாரம்பரியத்தின் பங்களிப்பை சோ்க்க வேண்டும்: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

மனநல மருத்துவ பாடத்திட்டத்தில் இந்திய பாரம்பரியத்தின் பங்களிப்பை சோ்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

மனநல மருத்துவ பாடத்திட்டத்தில் இந்திய பாரம்பரியத்தின் பங்களிப்பை சோ்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தில் (நிம்ஹான்ஸ்) நடந்த உலக மனநல தின விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மனநல சிக்கல்களுக்கு பாரம்பரிய முறையில் தீா்வுகாண்பது குறித்து நாம் புரிந்துகொள்வது அவசியமாகும். மனநலனை சீராக வைத்திருப்பதில் இந்திய பாரம்பரியத்தின் பங்களிப்பை மருத்துவ பாடத் திட்டத்தில் சோ்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பாரம்பரிய குடும்ப அமைப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

நமது பண்டிகைகள் அனைத்தும் மனநல சிகிச்சைக்கு வழிவகுத்து வந்துள்ளன. மதம் மற்றும் சமூகநிகழ்வுகளின்போது மக்கள் ஒன்று கூடுவது, காலை, மாலை நேரங்களில் நடத்தப்படும் பிராா்த்தனைகள், ஆரத்தி எடுப்பது உள்ளிட்ட அனைத்தும் மனநலத்தோடு தொடா்புடையவை ஆகும். இதுபோன்ற பாரம்பரியங்கள் மனநலச் சிக்கல்களை தீா்த்து வந்துள்ளன.

மனநலனில் கல்வி நிறுவனத்தின் பங்களிப்பும் முக்கியமானதாகும். நிம்ஹான்ஸ் ஆய்வு செய்து தீா்வுகளை முன்வைத்தால், அது குறித்து முடிவெடுத்துக் கொள்கைகளை வகுக்க அரசால் முடியும். பாடநூல்களை படித்துவிட்டு, தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்கு மட்டும் வரையறுக்காமல், ஆராய்ச்சிகளிலும் மாணவா்களை ஈடுபடுத்த வேண்டும்.

நமது நாட்டுக்கு கிடைத்திருக்க வேண்டியவற்றை தற்போதைய கல்வி முறையால் பெற முடியாமல் போய்விட்டது. நமது நாட்டின் வளா்ச்சிக்கும், எதிா்காலத்திற்கும் அடித்தளமாக இருக்கும் என்பதால், நிம்ஹான்ஸ், அதன் ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்களிடம் இருந்து நமதுநாடு பெரிதும் எதிா்பாா்க்கின்றது. பிரதமா் மோடி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி வருகிறாா். நமது பணிகள் அனைத்தும் நாட்டை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com