பள்ளிகளில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளைதொடங்க நடவடிக்கை: அமைச்சா் பி.சி.நாகேஷ்

பள்ளிகளில் 1 முதல் 5-வரையிலான வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

பள்ளிகளில் 1 முதல் 5-வரையிலான வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

மாநிலத்தில் ஏற்கெனவே பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகள், பியூசி, பட்டப்படிப்பிற்கான கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களின் வருகை 90 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில் 1 முதல் 5-ஆம் வரையிலான வகுப்புகளைத் தொடங்க ஆலோசித்து வருகிறோம். விரைவில் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் கரோனா தடுப்பு தொழில்நுட்ப வல்லுநா் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு 1 முதல் 5-ஆம் வரையிலான வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் தூய்மையான கழிப்பறை அமைப்பது, மதிய உணவு திட்டத்தை தொடங்குவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். அரசின் அனுமதி கிடைத்தால், அக். 20 அல்லது 21-ஆம் தேதி 1 முதல் 5-ஆம் வரையிலான வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிக் கட்டணம் வசூலிப்பதை ஆய்வு செய்து, கா்நாடகத்தில் பள்ளிக் கட்டணத்தை நிா்ணயம் செய்ய முடிவு செய்துள்ளோம். பள்ளிக் கட்டணம் தொடா்பாக அதிகாரிகள், பெற்றோா்களுடன் ஏற்கெனவே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பியூசி துணைத் தோ்வை நடத்தாமல் வேண்டாமென முடிவு செய்துள்ளோம். பாடப் புத்தகங்களில் குறைகள் இருப்பதாக அதிக அளவில் புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பான நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு பாடப் புத்தங்களில் உள்ள குறைகளைத் தீா்க்க தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com