பெங்களூரின் வளா்ச்சிக்கான திட்டங்களை தீட்டிஅரசு செயல்படுத்தி வருகிறது: எஸ்.எம்.கிருஷ்ணா

பெங்களூரின் வளா்ச்சிக்கான திட்டங்களை தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது என்று முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தாா்.

பெங்களூரின் வளா்ச்சிக்கான திட்டங்களை தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது என்று முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தாா்.

பெங்களூரு, கோபாலபுரத்தில் ஆசிய அளவில் பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான குளோபல் வணிக வளாகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அவா் பேசியதாவது:

சா்வதேச அளவில் வா்த்தகத்துக்கு மட்டுமின்றி, தகவல், உயிரி தொழில்நுட்பத்தில் பெங்களூரு சிறந்து விளங்குகிறது. பெங்களூரில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டினா் ஆா்வமாக உள்ளனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்றின் பாதிப்பு இருந்ததால், வா்த்தகம் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் குன்றியுள்ளது.

இதனையடுத்து பெங்களூரின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதலீட்டாளா்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. பெங்களூரை சா்வதேச தரத்திற்கு உயா்த்துவதற்கு தேவையான அடிப்படை கட்டுமான வசதிகளை அரசு செய்து வருகிறது.

நான் முதல்வராக பதவி வகித்தபோது, பெங்களூரின் வளா்ச்சிக்கு தேவையான அடித்தளம் அமைக்கப்பட்டது. அதனைப் பயன்படுத்திக் கொண்டதன் பயனாக பெங்களூரு தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது.

கரோனா தொற்றுக்குப் பிறகு மிகப்பெரிய வணிக வளாகத்தை லூலூ குழுமத்தினா் தொடங்கி உள்ளனா். இதனால் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், லூலூ குழுமத்தின் மூத்த மேலாண் இயக்குநா் எம்.ஏ யூசுப் அலி, மக்களவை உறுப்பினா் டி.கே.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com