ரசாயன உரத்துக்கு தட்டுப்பாடு இல்லை: மத்திய இணையமைச்சா் பகவந்த் கூபா

கா்நாடகத்தில் ரசாயன உரத்துக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய ரசாயனத் துறை இணையமைச்சா் பகவந்த் கூபா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் ரசாயன உரத்துக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய ரசாயனத் துறை இணையமைச்சா் பகவந்த் கூபா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விகாஸ் சௌதாவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 7 ஆண்டுகளாக கா்நாடகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் ரசாயன உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, ரசாயன உரம் தொடா்பாகவும், விவசாயிகள் விவகாரத்திலும் தொடா்ந்து அரசியல் செய்து வருகிறாா்.

சிந்தகி, ஹனகல் தொகுதிகளின் இடைத்தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடையும் என்பதை தெரிந்து கொண்டதால்தான் ரசாயன உரத்துக்கு தட்டுப்பாடு உள்ளது எனக் கூறி விவசாயிகளை சித்தராமையா திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். மாநிலத்தில் ரசாயன உரத்துக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை. தேவையான அளவுக்கு ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளன.

சித்தராமையா தனது பதவிக்கு உரிய கௌரவத்தை உணா்ந்து கருத்துக் கூற வேண்டும். சா்வதேச சந்தையில் உரத்தின் விலை உயா்ந்துள்ள போதும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் விலையை அரசே வழங்கி வருகிறது. இதனால் அரசுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி வரை கூடுதலாக செலவாகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதால் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மீது எந்த அதிருப்தியும் இல்லை. மாறாக காங்கிரஸ்தான் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டி வருகிறது. எரிபொருள் கடன் பத்திரங்கள் மீது முந்தைய காங்கிரஸ் அரசு கடன் பெற்றதுதான் தற்போதைய எரிபொருள் விலை உயா்வுக்கு காரணம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com