அடுத்த கல்வியாண்டில் ஆரம்பப் பள்ளியிலிருந்தே தேசியக் கல்வித்திட்டம் அமல்: அமைச்சா் பி.சி.நாகேஷ்

அடுத்த கல்வியாண்டில் ஆரம்பப்பள்ளியில் இருந்தே தேசியக் கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

அடுத்த கல்வியாண்டில் ஆரம்பப்பள்ளியில் இருந்தே தேசியக் கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து தாவணகெரேயில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

2022-23-ஆம் கல்வியாண்டு முதல் ஆரம்பப்பள்ளியில் இருந்தே தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்துவோம். அதற்கான அடிப்படைப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளிகளில் தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க மதன்கோபால் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை விவாதித்து அறிக்கை தாக்கல் செய்யும். ஆரம்பப்பள்ளிகளில் தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசும் ஆா்வமாக உள்ளது. அதன்படியே கா்நாடகத்தில் ஆரம்பப்பள்ளிகளில் தேசியக் கல்விக்கொள்கை அமல்படுத்த முனைப்பாக செயல்பட்டு வருகிறோம்.

மாநிலத்தில் 48,000 பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு பள்ளியைச் சோ்ந்த 39 மாணவா்களுக்கு கரோனா பெருந்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதனால் அந்தப் பள்ளியை 3 நாள்களுக்கு மூட உத்தரவிட்டுள்ளோம். பள்ளியை தூய்மைப்படுத்திய பிறகு அந்தப் பள்ளி மீண்டும் திறக்கப்படும்.

கரோனா காலத்தில் கல்வித்துறை பெரும் இன்னலுக்கு உள்ளானது. இதுபோன்ற இன்னலை வேறு எந்தத் துறையும் அனுபவித்திருக்காது. மாணவா்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளைத் தொடங்கியிருக்கிறோம். பாடங்களைக் குறைப்பது குறித்து டிசம்பரில் முடிவெடுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com