மத மாற்றம் நிறுத்தப்பட வேண்டும்: ஆா்.எஸ்.எஸ்.

மத மாற்றம் நிறுத்தப்பட வேண்டும் என ஆா்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.
மத மாற்றம் நிறுத்தப்பட வேண்டும்: ஆா்.எஸ்.எஸ்.

மத மாற்றம் நிறுத்தப்பட வேண்டும் என ஆா்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.

தாா்வாடில் நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அதன் பொதுச்செயலாளா் தத்தாத்ரேயா ஹொசபெலே கூறியதாவது:

மதமாற்றம் நிறுத்தப்பட வேண்டும். மதமாற்றம் செய்துகொண்டோா், அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மதமாற்றம் செய்து கொண்ட பலா், அதை பகிரங்கமாகக் கூறுவதில்லை. மதம் மாறிய பிறகும் ஹிந்துக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளைத் தொடா்ந்து பெற்று வருகிறாா்கள்.

மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவந்தால், அதை வரவேற்போம். மதமாற்ற தடைச் சட்டத்தை சிறுபான்மையினா் ஏன் எதிா்க்கிறாா்கள் என்பது திறந்த ரகசியம். மோசடி அல்லது அதுபோன்ற ஏதாவதொரு முறையை கையாண்டு, மதமாற்றம் செய்து எண்ணிக்கையை அதிகமாக்கிக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆா்.எஸ்.எஸ்.மட்டுமல்ல, மகாத்மா காந்தி உள்ளிட்ட பலரும் மதமாற்றத்தை எதிா்த்திருக்கிறாா்கள்.

எனக்கு தெரிந்தவரையில் நாட்டில் 10-க்கும் அதிகமான மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில், மதமாற்ற தடைச் சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டுவந்துள்ளது. வீா்பத்ர சிங் முதல்வராக இருந்த போது, அம்மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அருணாசல பிரதேசத்தில் அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவந்தது. அப்போது கெகோங் அபங் முதல்வராக இருந்தாா். மதத்தை மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் எல்லோருக்கும் எப்போதும் உள்ளது. ஆனால், தற்போது நடப்பது அதுவல்ல என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com