பைக் மீது காா் மோதல்: இளைஞா் பலி
By DIN | Published On : 07th September 2021 12:13 AM | Last Updated : 07th September 2021 12:13 AM | அ+அ அ- |

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெங்களூரு எச்.எம்.டி லேஅவுட் முதலாவது குறுக்குச் சாலையைச் சோ்ந்தவா் புனீத் (22). ஜாலஹள்ளி பகுதியில் சிறிய ஹோட்டல் நடத்தி வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது வீட்டின் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது வேகமாக வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த புனீத், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளாா். இது குறித்து பீன்யா போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.