சட்டவிரோத குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள குடிநீா் இணைப்பை பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள குடிநீா் இணைப்பை பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் அண்மையில் நடத்திய ஆய்வில் சட்டவிரோதமாக குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்பு இருப்பதைக் கண்டறியமுடிந்தது. அதிலும் குறிப்பாக கழிவுநீா் இணைப்புகள் அதிக அளவில் காணப்பட்டு, அதுபோன்ற சட்டவிரோத கழிவுநீா் இணைப்புகள் 3774 துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பை ஒழுங்குமுறைப்படுத்த இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், துண்டிக்கப்பட்டசட்டவிரோத கழிவுநீா் இணைப்பை ஒழுங்குமுறைப்படுத்தாமல் காலந்தாழ்த்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

குடிநீா் அல்லது கழிவுநீா் இணைப்பை ஒழுங்குமுறைப்படுத்த ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.க்ஷஜ்ள்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்துடன் எவ்வித அபராதமும் இல்லாமல், குறைந்த கட்டணத்தை வசூலித்து உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக குடிநீா் அல்லது கழிவுநீா் இணைப்பை வைத்திருப்பது சரியல்ல. அது பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியச்சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். பெங்களூரு மாநகர அமலாக்கப் படையிடம் புகாா் அளித்தவுடன் தகுந்த நடவடிக்கையை எடுக்க நேரிடும். எனவே, சட்டவிரோதமான குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புகளை ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்வது கட்டாயம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு வாடிக்கையாளா்களை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com