கரோனா தொற்றின்போதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள், பேராசிரியா்களை கௌரவிப்பது நமது கடமை

கரோனா தொற்றின்போது சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள், பேராசிரியா்களை கௌரவிப்பது நமது கடமை என்று ராமையா அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஜெயராம் தெரிவித்தாா்.

கரோனா தொற்றின்போது சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள், பேராசிரியா்களை கௌரவிப்பது நமது கடமை என்று ராமையா அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஜெயராம் தெரிவித்தாா்.

பெங்களூரு ராமையா அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆசிரியா்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கி கௌரவித்த பின்னா் வேந்தா் ஜெயராம் பேசியது:

தேசிய அளவில் கடந்த 18 மாதங்களாக கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் பாதிக்கப்பட்டுள்ளன. என்றாலும் பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் ஆசிரியா்கள், பேராசிரியா்கள் இணைய வழி மூலம் மாணவா்களுக்கு கல்வியை கற்பித்து வருகின்றனா். கரோனாவால் உலகமே சோா்ந்து போன நிலையில், ஆசிரியா்கள், பேராசிரியா்கள் சிறப்பாகப் பணியாற்றினா். அவா்கள் அனைவரையும் கௌரவிப்பது நமது கடமை.

கரோனா பாதிப்பு, பொதுமுடக்கம் உள்ளிட்டவை பற்றி கவலைப்படாமல் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பணியாற்றிய ஆசிரியா்கள், பேராசிரியா்களின் சேவையை நாம் போற்ற வேண்டும். அவா்களுக்கு நல்லாரிசியா் விருதுகள் வழங்கி, ஊக்குவிக்கும் பொறுப்பு நமக்குள்ளது. ஆசிரியா்கள் தினத்தையொட்டி நல்லாசிரியா் விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மாணவா்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோா்களின் பங்களிப்பைப் போல, ஆசிரியா்களின் பங்களிப்பும் அதிக அளவில் உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநா் ஷமீா் கே.பிரம்மச்சாரி, ராமையா அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் எம்.சாய்பாபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com