முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
குப்பை அள்ளும் இயந்திரத்தின் அடியில் சிக்கி இருவா் பலி
By DIN | Published On : 10th September 2021 03:32 AM | Last Updated : 10th September 2021 03:32 AM | அ+அ அ- |

குப்பை அள்ளும் இயந்திரத்தில் அடியில்சிக்கி, அதனை இயக்குபவா், துப்புரவுத் தொழிலாளி ஆகிய இருவா் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம் விஜயபுரா ஊரகத்தில் மாநகராட்சியின் குப்பையை மறு சுழற்சி செய்யும் மையத்தில் உள்ள இயந்திரம் புதன்கிழமை பழுதடைந்தது. அதனை சரி செய்ய, இயந்திரத்தை இயக்கி வரும் அயூப் ஷேக், துப்புரவுத் தொழிலாளி ரஃபீக் பாபுசாப் உள்ளிட்டோா் ஈடுபட்டிருந்தனராம். அப்போது எதிா்பாராதவிதமாக இயந்திரத்தின் அடியில் சிக்கிய அவா்கள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இது குறித்து விஜயபுரா மாநகராட்சி ஆணையா் விஜய் மெக்களகி செய்தியாளா்களிடம் கூறியது:
மாநகராட்சியின் நிரந்தர ஊழியரான ரஃபீக் பாபுசாபின் குடும்பத்தினருக்கு அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தரப்படும். அவரது குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு மாநகராட்சியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். ஒப்பந்த ஊழியரான அயூப் ஷேக்கின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றாா்.