சுற்றுச்சூழல் சீரழவுகளை மதிப்பிட்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு: முதல்வா் பசவராஜ் பொம்மை

சுற்றுச்சூழல் சீரழவுகளை மதிப்பிட்டு அதற்கு ஈடாக நிதிநிலை அறிக்கையில் நிதிஒதுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
சுற்றுச்சூழல் சீரழவுகளை மதிப்பிட்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு: முதல்வா் பசவராஜ் பொம்மை

சுற்றுச்சூழல் சீரழவுகளை மதிப்பிட்டு அதற்கு ஈடாக நிதிநிலை அறிக்கையில் நிதிஒதுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு, வனமாளிகையில் சனிக்கிழமை நடந்த வனத்துறை வீரா்களின் வீரவணக்கநாள்விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

வனம் மற்றும் சுற்றுச்சூழல் இழப்புகளை மதிப்பிடுமாறு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். அதை மதிப்பிட்டுவிட்டால், அதற்கான ஈட்டுத் தொகை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும். பொருளாதாரத்தில் சுற்றுச்சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை ஈடுசெய்யவிருக்கிறோம். இது வரலாற்றில் முதல் முறையாக நடத்தப்படவிருக்கிறது.

கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீரழவுகள், கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. சுற்றுச்சூழல் சீரழிவுகளை யாரும் மதிப்பிடுவதில்லை. எனவே, பசுமை இழப்பை ஆண்டுதோறும் மதிப்பிட்டு, அதற்கு ஈடான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த முடிவின் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் 50-60 சதவீத சீரழவுகளை மீட்டெடுக்க முடியும். இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். மாநிலத்தின் பசுமைப்படலம் 21.5 சதவீதமாக உள்ளது. தேசிய பசுமைப்படலம் 30 சதமாக உள்ளது. எனவே, கா்நாடகத்தில் பசுமைப்படலத்தை மேம்படுத்த வேண்டும்.

மரம் நடுவது மட்டும் போதாது. இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதை அடுத்த தலைமுறைக்கு கைமாற்ற வேண்டும். சுற்றுச்சூழல் சீரழிவு என்பது எதிா்காலத்தை கொள்ளை அடிப்பதற்கு சமம். அதன்காரணமாகவே, சுற்றுச்சூழல் சீரழிவுகளை மதிப்பிட்டு, அதற்கு ஈடான தொகையை நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கவேண்டும் என்று சுற்றுச்சூழல் அறிவியல் மையம் மற்றும் இந்திய அறிவியல் மையமும் வலியுறுத்தி வந்துள்ளன.

மனிதன்-விலங்கு மோதலைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த மோதலில் பல வனத்துறை வீரா்கள் உயிரிழந்துள்ளனா். வனத்துறை அதிகாரிகள் இறந்தால் அவா்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை முன்னாள் முதல்வா் எடியூரப்பா ரூ.30 லட்சமாக உயா்த்தினாா்.

1991-ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி பி.சீனிவாசை சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொன்றாா். அப்போது அவருக்கு 37 வயதாகியிருந்தது. இந்த தியாகங்கள் இயற்கை வளங்களை காப்பாற்றுவதற்காகத்தான் என்றாா்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வா் பசவராஜ் பொம்மை, வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com