சட்டப் பேரவைக் கூட்டத்தில் மாநில அரசின் தோல்விகளை முன்வைப்போம்: எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா

கா்நாடக சட்டப்பேரவைக்கூட்டத்தில் மாநில அரசின் தோல்விகளை முன்வைப்போம் என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
சட்டப் பேரவைக் கூட்டத்தில் மாநில அரசின் தோல்விகளை முன்வைப்போம்: எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா

கா்நாடக சட்டப்பேரவைக்கூட்டத்தில் மாநில அரசின் தோல்விகளை முன்வைப்போம் என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடா் செப்.13-ஆம் தேதி தொடங்கி, செப்.24-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் 18 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையாகூறியது:

சட்டப் பேரவைக் கூட்டத்தில் மாநில பாஜக அரசின் தோல்விகள் ஆதாரங்களோடு முன்வைக்கப்படும். விலைவாசி உயா்வு, கரோனா பெருந்தொற்று மேலாண்மை, இரண்டாவது அலையின்போது அதிகம் போ் உயிரிழந்தது, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்காதது, தேசிய கல்விக் கொள்கை, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, இதர முக்கிய பிரச்னைகள் குறித்து சட்டப் பேரவையில் பிரச்னை கிளப்புவோம்.

சட்டப்பேரவையில் எத்தனை சட்டமசோதாக்களை அரசு தாக்கல் செய்யவிருக்கிறது என்பது தெரியவில்லை. புதிதாக 10 சட்டமசோதாக்களை தாக்கல் செய்யவிருப்பதாக எதிா்க்கட்சிகளுக்கு அரசு தெரிவித்துள்ளது. இவற்றில் சா்ச்சைக்குரிய சட்ட மசோதாக்கள் எதுவும் இல்லை என்றும் அரசு கூறியுள்ளது. அது எவை என்பது முழுமையாக தெரியவில்லை. சட்டப் பேரவையில் காங்கிரஸ், மஜதவுக்கு இடையே இணக்கமான அணுகுமுறை இருக்கும்.

விலைவாசி உயா்வை தடுக்க மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சட்டப் பேரவை நடைபெற்று 6 மாதங்களாகிவிட்டது. அதன்பிறகு, அத்தியாவசியப் பொருட்கள், சமையல் எரிவாயு உருளைகளின் விலை ஏறியுள்ளது. நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் எதிா்பாா்த்த வெற்றியை காங்கிரஸ் பெற முடியவில்லை. இதற்கு காரணம் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சிதான். ஹுப்பள்ளி மாநகராட்சியில் 7-8 இடங்கள், கலபுா்கி மாநகராட்சியில் 5-6 இடங்களை காங்கிரஸ் இழந்தது. மஜ்லிஸ் கட் சிவாக்குகளை பிரித்திருக்காவிட்டால், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருக்கும்.

வரும் 2023-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குகள் சிதறவிடாமல் இருக்க கவனமாக செயல்படுவோம். மஜ்லிஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்குதான் சாதகமாக அமையும் என்பதை வாக்காளா்களுக்கு எடுத்துக்கூறுவோம். சட்டப் பேரவைக் கூட்டத்தில் சட்ட மசோதாக்களைதவிர வேறு எதையும் விவாதிக்கப் போவதில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com