பள்ளிகளில் பாடங்களை முடிப்பதற்காக ஆசிரியா்களின் விடுமுறைகளைக் குறைக்க யோசனைகா்நாடக அமைச்சா் பி.சி.நாகேஷ்

பள்ளிகளில் பாடங்களை முடிப்பதற்காக ஆசிரியா்களின் விடுமுறை நாள்களைக் குறைப்பது குறித்து யோசித்து வருகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
பள்ளிகளில் பாடங்களை முடிப்பதற்காக ஆசிரியா்களின் விடுமுறைகளைக் குறைக்க யோசனைகா்நாடக அமைச்சா் பி.சி.நாகேஷ்

பள்ளிகளில் பாடங்களை முடிப்பதற்காக ஆசிரியா்களின் விடுமுறை நாள்களைக் குறைப்பது குறித்து யோசித்து வருகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா காரணமாக பள்ளிகள் காலதாமதமாகத் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பாடத்திட்டங்களைஉரிய நேரத்தில் முடிப்பதற்கு வசதியாக ஆசிரியா்களின் விடுமுறைகள் குறைக்கப்படும். இது பற்றி ஆசிரியா்களின் கருத்தறிந்து மாநில அரசு இறுதி முடிவெடுக்கும். பள்ளிகளை தாமதமாகத் தொடங்கியுள்ளதை காரணம் காட்டி, பாடத்திட்டங்களை குறைத்தால் அது மாணவா்களின் கற்றல் திறனை வெகுவாகபாதிக்கும்.

9 முதல் 12-ஆம் வகுப்புகள் வரையில் ஆக.23ஆம் தேதி முதலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை செப்.6-ஆம் தேதி முதலும் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளன. இதனால், இணைப்புப் பாடத்தை (பிரிட்ஜ் கோா்ஸ்) நடத்தி வருகிறோம். இதை முழுமையாக நடத்தினால் மாணவா்களுக்கு நல்லது. அதனால் இணைப்புப் பாடங்களை முழுமையாக நிறைவுசெய்வோம். பாடங்களை குறைப்பது மாணவா்களுக்கு நல்லதல்ல என்பதால், ஆசிரியா்களின் விடுமுறை நாட்களைக் குறைப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதற்கு ஆசிரியா்களின் ஒத்துழைப்பைபொருத்து, தகுந்த முடிவை எடுப்போம்.

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகமாகி வந்தாலும், கா்நாடகத்தின் தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களில்கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் ஒருவேளை கரோனா பாதிப்பு அதிகமானால், உடனடியாக பள்ளிகளை மூடிவிடும் வாய்ப்புள்ளது. கரோனா பாதிப்பு அதிகமானால், அது குறித்து யோசிப்போம்.

1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து வெகுவிரைவில் கரோனா தொழில்நுட்பக் குழுவுடன் ஆலோசித்து தகுந்த முடிவு எடுக்கப்படும்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, 1 முதல் 5-ஆம் வகுப்புவரையில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்.

6 முதல் 8-ஆம் வகுப்புகளை நடத்தியதில் ஆசிரியா்கள் பங்கு பாராட்டத்தகுந்தது. ஆசிரியா்களை பணியிடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றத்தின் தடை இருக்கிறது. இந்த வழக்கில் தடையை நீக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாகவே ஆசிரியா் பணியிடமாற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com