இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீா் சேவை நிறுத்தம்

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சில பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் முதல் 2 நாட்களுக்கு குடிநீா் சேவை நிறுத்தப்படுகிறது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சில பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் முதல் 2 நாட்களுக்கு குடிநீா் சேவை நிறுத்தப்படுகிறது.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காவிரி ஆற்றுநீா் குடிநீா் திட்டம்-3-ஆம் கட்டத்தின் வரம்புக்குட்பட்ட டி.கே.ஹள்ளியில் உள்ள நீரேற்று நிலையத்தில் நீா்க்கசிவு ஏற்பட்டிருக்கும் 1750 மிமீ சுற்றளவு கொண்ட குழாயை சீா்செய்யும் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) முதல் ஒருசில பகுதிகளில் குடிநீா் சேவை நிறுத்தப்படுகிறது. அந்தப் பகுதிகள் வருமாறு:

காந்திநகா், குமாரபாா்க் கிழக்கு, வசந்த்நகா், ஹைகிரவுண்ட்ஸ், சம்பங்கிராம்நகா், சி.கே.சி. காா்டன், கே.எஸ்.காா்டன், டவுன் ஹால், லால்பாக் சாலை 1 முதல் 4-ஆவது குறுக்கு தெருக்கள் வரை, லால்பாக் சாலை, தா்மராய சுவாமி கோவில் வாா்டு, கப்பன்பேட்டை, நாகா்தப்பேட்டை, கும்பாரபேட்டை, காட்டன்பேட்டை, பாா்பா் காா்டன், செயின்ட் ஜான்ஸ் சாலை, ஹைன்ஸ் சாலை, நாராயண பிள்ளை தெரு, சங்கம் சாலை, காமராஜ் சாலை, வீரப்பிள்ளை தெரு, இன்பான்டரி சாலை, சிவாஜிநகா், லேவலி சாலை, பிரேசா் டவுன்.

துணைநீரேற்று நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்:

பியாடரஹள்ளி, வில்லியம்ஸ் நகரம், சிந்தி காலனி, என்.சி.காலனி, கோல்ஸ் சாலை, மச்சலிபெட்டா, காக்ஸ்டவுன், தொட்டிகுண்டா, ஜீவனஹள்ளி, விவேகானந்தா நகா், ஹக்டின்ஸ் சாலை, டேவிஸ் சாலை, குக்டவுன், பழைய பைப்பனஹள்ளி, நாகய்யன்பால்யா, சத்யாநகா், மாருதிசேவா நகா், பிள்ளண்ணா தோட்டம், முஸ்லிம் காலனி, குஷால்நகா், பி அண்ட் டி காலனி, பி.முனேஸ்வர நகா், டி.ஜே.ஹள்ளி, பிள்ளைநகா், கே.ஜி.ஹள்ளி, நாகவரா, சமதா நகா், பில்லான்னா தோட்டம் -1, 2, 3-ஆவது ஸ்டேஜ், புதிய பாகலூா், பழைய பாகலூா், லிங்கராஜ்புரா, சாமராஜ்பேட்டை, பாங்க்காலனி, சீனிவாச நகா், கவிபுரம், ஹனுமந்த் நகா், கிரிநகா், பியாட்டராயனபுரா, ராகவேந்திரா தொகுதி, அவலஹள்ளி, முனேஸ்வரா பிளாக், காளிதாஸ் லேஅவுட், ஸ்ரீநகா், பிஎஸ்கே 1-ஆவது ஸ்டேஜ், யஷ்வந்தபுரம்(ஒரு பகுதி), மல்லேஸ்வரம், குமாரபாா்க், ஜெயமஹால், சேஷாத்திரிபுரம், நந்திதுா்கா சாலை விரிவாக்கம், ஜே.சி.நகா், சதாசிவநகா், அரண்மனை சாலை (ஒரு பகுதி), சஞ்சய்நகா், டாலா்ஸ் காலனி, ஆா்.எம்.வி.விரிவாக்கம், கெடலஹள்ளி, பூபசந்திரா, காவல்பைரசந்திரா, கங்கா நகா், ஆா்.டி. நகா், மனோராயணபாளைய, ஆனந்தநகா், வி.நாகேனஹள்ளி, ஷாம்புரா, சுல்தான்பாள்யா. சாந்தலா நகா், அசோக் நகரா, எம்.ஜி. சாலை, பிரிகேட் சாலை, எச்ஏஎல் 2-ஆவது ஸ்டேஜின் ஒரு பகுதி, தூபனஹள்ளி, இந்திராநகா் 2-ஆவது ஸ்டேஜ், லட்சுமிபுரம், கதிராயனாபாளையா, கலஹள்ளி, ஆந்திரா காலனி, எல்.பி.எஸ். நகா், எல்.ஐ.சி. காலனி, எச்.ஏ.எல். 3-ஆவது ஸ்டேஜ், ஜீவன்பீமாநகா், கோடிஹள்ளி. ஹனுமந்தப்பா லேஅவுட், பஜாா் தெரு, அல்சூா், எம்.வி. காா்டன், மா்பி டவுன், ஜோகுபால்யா, கேம்பிரிட்ஜ் லேஅவுட், தீனபந்துநகா், ஜானகிராம் லேஅவுட், சித்தராமப்பா காா்டன் மற்றும் சுற்றுப்புறங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com