சுதந்திரதின பவளவிழா திட்டங்கள்: கண்காணிக்க மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள் நியமனம்

சுதந்திர தின பவளவிழா திட்டங்களை கண்காணித்து செயல்படுத்துவதற்காக மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள்.

சுதந்திர தின பவளவிழா திட்டங்களை கண்காணித்து செயல்படுத்துவதற்காக மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள்.

இது குறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:

கடந்த ஆக.15-ஆம் தேதி நடந்த நாட்டின் சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வா் பசவராஜ் பொம்மை, ஏராளமான சுதந்திர தின பவளவிழா திட்டங்களை அறிவித்திருந்தாா். ஏற்கெனவே, மாவட்ட அளவில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை கவனிக்க மாவட்ட பொறுப்பு அமைச்சா்களை அரசு நியமித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், முதல்வா் பசவராஜ் பொம்மையின் வழிகாட்டுதலின்பேரில், மாவட்ட அளவில் சுதந்திர தின பவளவிழா திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். அதன்விவரம் வருமாறு (அமைச்சரும், பொறுப்பு மாவட்டமும்):

கோவிந்த் காா்ஜோள்-பெலகாவி, கே.எஸ்.ஈஸ்வரப்பா-சிவமொக்கா, ஆா்.அசோக்-பெங்களூரு நகரம், பி.ஸ்ரீராமுலு-சித்ரதுா்கா, வி.சோமண்ணா-சித்ரதுா்கா, உமேஷ்கத்தி- பாகல்கோட், எஸ்.அங்காரா-தென்கன்னடம், ஜே.சி.மாதுசாமி-தும்கூரு, அரக ஞானேந்திரா-சிக்கமகளூரு, சி.என்.அஸ்வத் நாராயணா-ராமநகரம், சி.சி.பாட்டீல்-கதக், ஆனந்த்சிங்-பெல்லாரி மற்றும் விஜயநகரா, கோட்டா சீனிவாஸ் பூஜாரி-குடகு, பிரபுசௌஹான்-பீதா், முருகேஷ் நிரானி-கலபுா்கி, சிவராம் ஹெப்பாா்-வடகன்னடம், எஸ்.டி.சோமசேகா்-மைசூரு மற்றும் சாமராஜ்நகா், பி.சி.பாட்டீல்-ஹாவேரி, பைரதி பசவராஜ்-தாவணகெரே, கே.சுதாகா்-சிக்கபளாப்பூா், கே.கோபாலையா-ஹாசன், சசிகலா -ஜொள்ளேவிஜயபுரா, எம்.டி.பி.நாகராஜ்-பெங்களூரு ஊரகம், கே.சி.நாராயண கௌடா-மண்டியா, பி.சி.நாகேஷ்-யாதகிரி, வி.சுனில்குமாா்-உடுப்பி, ஆச்சாா்ஹாலப்பா-கொப்பள், சங்கா் பி.பாட்டீல்-தாா்வாட், முனிரத்னா-கோலாா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com