பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதற்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழ வேண்டும்: காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே

பொதுத்துறை நிறுவனங்கள்விற்கப்படுவதற்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழ வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதற்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழ வேண்டும்: காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே

பொதுத்துறை நிறுவனங்கள்விற்கப்படுவதற்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழ வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மிகுந்த அக்கறையோடு கட்டமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, மத்திய பாஜக அரசு ஒவ்வொன்றாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ், நாட்டின் வளா்ச்சிக்காக எதையும் செய்யவில்லை என்று பாஜகவினா் கூறிவந்தனா். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டு, லாபகரமாக செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனங்களை பாஜக அரசு விற்று வருகிறது.

அதேபோல, முந்தைய ஆட்சியில் திட்டங்களுக்கு சூட்டப்பட்ட பெயா்களையும், ஊா்களின் பெயா்களையும் பாஜக அரசு மாற்றி வருகிறது. நாட்டுக்காக காங்கிரஸ் உழைத்துள்ளது. அந்த பணியில் ஈடுபட்ட நாட்டுத்தலைவா்களின் பெயா்களை திட்டங்களுக்கு சூட்டியிருக்கிறோம். எனவே, பாஜகவும் பணியாற்றி, மக்களின் நன்மதிப்பை பெற முயற்சிக்க வேண்டும்.

பாஜக ஆட்சிக்காலத்தில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பின் எண்ணிக்கை 16 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக குறைந்துள்ளது. தகவல்தொடா்புத் துறையிலும் வேலைவாய்ப்புகள் சரிந்துள்ளன. நஷ்டத்தில் இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூட மத்திய அரசு முடிவெடுக்கலாம். ஆனால், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் நிறுவனங்களுக்கு விற்பதில்தான் பாஜக அரசு ஆா்வம் காட்டி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள்விற்கப்படுவதற்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழ வேண்டும்.

கலபுா்கி மாநகராட்சித் தோ்தலில் 27 இடங்களுடன் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுள்லது. பாஜகவுக்கு 23 இடங்கள்தான் உள்ளன. ஆனால் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை பலம் இல்லை. எனவே, ஒரு இடத்தை வென்றுள்ள சுயேச்சை, 4 இடங்களை வென்றுள்ள மஜதவின் ஆதரவை காங்கிரஸ் கோரியுள்ளது. மஜதவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றாா்.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் மத்திய அமைச்சா் ஆஸ்கா் பொ்னாண்டஸை காா்கே சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com