நஞ்சன்கூடில் பழமையான ஹிந்து கோயில் இடிப்பு: பாஜக, காங்கிரஸ் கண்டிப்பு

நஞ்சன்கூடில் பழமையான ஹிந்துக் கோயில் இடிக்கப்பட்டதை பாஜக, காங்கிரஸ் கண்டித்துள்ளன.

நஞ்சன்கூடில் பழமையான ஹிந்துக் கோயில் இடிக்கப்பட்டதை பாஜக, காங்கிரஸ் கண்டித்துள்ளன.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில்களின் பட்டியலில் மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு வட்டம், ஹுன்சகுனி கிராமத்தில் உள்ள மகாதேவம்மா கோயில் இடம்பெற்றிருந்தது. எனவே, மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் செப். 9-ஆம் தேதி இந்த கோயில் இடிக்கப்பட்டது.

வட்டாட்சியா் மோகனகுமாரியின் தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கோயிலை இடித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மகாதேவம்மா விக்கிரத்தை கிராம மக்கள் எடுத்துச் சென்றுவிட்டனா். அரசு நிலத்தில் கோயில் கட்டப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்தது.

கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். ‘கிராம மக்களின் கருத்துகளை கேட்டறியாமல் கோயில் இடிக்கப்பட்டது தவறு. இது உள்ளூா் மக்களின் மன உணா்வை புண்படுத்தியுள்ளது’ என்று அவா் தெரிவித்தாா்.

கோயில் இடிக்கப்பட்டதற்கு மைசூரு-குடகு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹாவும் கண்டனம் தெரிவித்துள்ளாா். ‘பொது இடங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயிலை இடித்தது கண்டனத்திற்குரியது. மேலும் கோயிலைமட்டும் ஏன் இடிக்கவேண்டும். பொது இடங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்களை ஏன் இடிக்கவில்லை?’ என்று பிரதாப் சிம்ஹா கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com