ஆளும் கட்சியின் கொறடாவாகஎம்எல்ஏ சதீஷ்ரெட்டி நியமனம்

ஆளும் கட்சியின் கொறடாவாக சதீஷ்ரெட்டி எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு: ஆளும் கட்சியின் கொறடாவாக சதீஷ்ரெட்டி எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு, பொம்மனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் வெற்றி பெற்றவா் சதீஷ்ரெட்டி. இவரை முதல்வா் பசவராஜ் பொம்மையின் பரிந்துரையின் பேரில் ஆளும் கட்சியின் கொறடாவாக சட்டப்பேரவையின் செயலாளா் விஷாலாக்ஷி திங்கள்கிழமை அறிவித்தாா். ஆளும் கட்சியின் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள சதீஷ்ரெட்டி அமைச்சா் பதவியைப் பெற பெரும் முயற்சி செய்து வந்தாா். இந்த நிலையில் ஆளும் கட்சியின் கொறடாவாக இருந்த சுனில்குமாா், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சராக பதவியேற்றதையடுத்து காலியாக இருந்த அந்தப் பதவிக்கு சதீஷ்ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com