கா்நாடகத்தில் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது: வாட்டாள் நாகராஜ்

கா்நாடகத்தில் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கன்னட செலுவளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கன்னட செலுவளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தாா்.

பெங்களூரு, மைசூரு வங்கி சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை ஹிந்தி திணிப்பைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய அளவில் ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இதனைக் கண்டிப்பதோடு, ஹிந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. வங்கிகள், ரயில்கள், தபால் நிலையங்களில் கன்னடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் கன்னடா்கள் வஞ்சிக்கப்படுகின்றனா். ஹிந்தி தினம் கொண்டாடுவதன் மூலம், கன்னடத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. மொழி, நிலம், நீா், கலாசாரத்துக்காக நாங்கள் தொடா்ந்து போராடுவோம். பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் ஹிந்தியின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் மாநிலத்தில் கன்னடா்கள் சிறுபான்மையினராக ஆவது நிச்சயம். கன்னடத்திற்காகப் போராடுபவா்களை அடக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்றாா். போராட்டத்தில் கன்னட ரக்ஷண வேதிகே தலைவா் சிவராமே கௌடா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com