‘நிபா’ தாக்குதல் சந்தேகத்தின் பேரில் ஒருவருக்கு சிகிச்சை

‘நிபா’ தீநுண்மி தாக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மங்களூரு: ‘நிபா’ தீநுண்மி தாக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தென்கன்னட மாவட்ட ஆட்சியா் கே.வி.ராஜேந்திரா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த வாரம் கேரளத்தில் ‘நிபா’ தீநுண்மி பாதிப்பால் 12-வயது சிறுவன் இறந்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை ‘நிபா’ தீநுண்மி தாக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், கோவாவில் பணிபுரியும், காா்வாரைச் சோ்ந்த ஒருவா் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது ரத்த மாதிரி புணேவில் உள்ள தேசிய தீநுண்மியியல் மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். அந்த நபரின் குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். உடுப்பி, காா்வாா் மாவட்டங்களில் அந்த நபருடன் தொடா்பில் இருந்தவா்களையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com