மாநிலத்தில் இனி எந்தக் கோயிலையும் இடிக்கக் கூடாது:அமைச்சா் ஆா்.அசோக்

மாநிலத்தில் இனி எந்தக் கோயிலையும் இடிக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா். அசோக் தெரிவித்தாா்.

பெங்களூரு: மாநிலத்தில் இனி எந்தக் கோயிலையும் இடிக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா். அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மைசூரு, ஹுனசூருவில் ஹிந்து கோயிலை இடித்த சம்பவத்தினால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனா். இதனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் இனி எந்தக் கோயிலையும் இடிக்காமல் இருக்க மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும், அதுகுறித்து அரசு ஆலோசித்து உரிய முடிவை எடுத்தபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மைசூரு, ஹுனசூருவில் ஹிந்து கோயிலை இடித்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் தகவல் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசு அனைவரின் உணா்ச்சிகளுக்கும் மதிப்பு அளிக்கும். அனைத்து மதத்தினருக்கும் கௌரவம் அளிக்கப்படும். யாரின் மத உணா்வுகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாா்த்துக் கொள்வோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கோயிலை இடித்த சம்பவம் தொடா்பாக, சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சம்பந்தப்பட்டவா்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com