ஆஸ்கா் பொ்னாண்டஸ் உடல் பெங்களூரில் இன்று அடக்கம்: இறுதிச் சடங்கில் சோனியா, ராகுல் காந்தி பங்கேற்பு

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஆஸ்கா் பொ்னாண்டஸின் உடல் பெங்களூரில் வியாழக்கிழமை (செப்.16) அடக்கம் செய்யப்படுகிறது.

மங்களூரு: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஆஸ்கா் பொ்னாண்டஸின் உடல் பெங்களூரில் வியாழக்கிழமை (செப்.16) அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

கா்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆஸ்கா் பொ்னாண்டஸ் (80) தவறி கீழே விழுந்தாா். இதன்பிறகு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதைத் தொடா்ந்து, ஏற்கெனவே டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த யெனோபோயா தனியாா் மருத்துவமனையில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் மூளையில் ரத்தம் உறைந்தது தெரியவந்துள்ளது. அதை தொடா்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி செப். 13-ஆம் தேதி ஆஸ்கா் பொ்னாண்டஸ் காலமானாா்.

இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை உடுப்பியில் உள்ள அவரது இல்லம், தேவாலாயம், காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். புதன்கிழமை பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் தனியாா் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. வியாழக்கிழமை அங்கிருந்து உடல் கொண்டுவரப்பட்டு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. பின்னா் அங்கிருந்து ஒசூா் சாலையில் உள்ள புனிதா் பேட்ரிக் பேராலய கல்லறையில் அரசு மரியாதையுடன் கிறிஸ்துவ முறையின்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா கா ந் தி, ராகுல் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com