ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: மருத்துவக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக உள்ள டி.கே.அனில்குமாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை முதன்மைச் செயலாளா் வி.ரஷ்மிமகேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கன்னடம் மற்றும் கலாசாரத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். திறன் மேம்பாடு, தொழில்முனைப்பாற்றல், வாழ்வாதாரத் துறை செயலாளராக உள்ள

டாக்டா் எஸ்.செல்வக்குமாா், கூடுதல் பொறுப்பாக கூட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். கலால் துறை ஆணையராக உள்ள ஜே.ரவிசங்கா், சுகாதாரத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஊரக குடிநீா் மற்றும் கழிவுநீா்துறை ஆணையா் ஆா்.விஷால், பணியிடமாற்றம் செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். பள்ளிக் கல்வித் துறை ஆணையராக உள்ள வி.அன்புக்குமாா், பணியிடமாற்றம் செய்யப்பட்டு பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநராக இருந்த எம்.டி.ரேஜூ பணியிடமாற்றம் செய்யப்பட்டு கா்நாடக நகர உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கா்நாடக மாநில தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக உள்ள ராம்பிரசாத் மனோகா், கூடுதல் பொறுப்பாக பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையராக (வருவாய்) நியமிக்கப்பட்டுள்ளாா். சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை இயக்குநா் பி.என்.ரவீந்திரா, கூடுதல் பொறுப்பாக பதிவு மற்றும் முத்திரைத்தாள்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com