காவல்துறைக்கு ரூ. 2.6 கோடி மதிப்பில்கரோனா உதவிப் பொருள்கள் வழங்கல்

கா்நாடக காவல் துறைக்கு ரூ. 2.6 கோடி மதிப்பிலான கரோனா உதவிப் பொருள்கள் தொகுப்பை சிலிகான்வேலி வங்கி வழங்கியது.

பெங்களூரு: கா்நாடக காவல் துறைக்கு ரூ. 2.6 கோடி மதிப்பிலான கரோனா உதவிப் பொருள்கள் தொகுப்பை சிலிகான்வேலி வங்கி வழங்கியது.

பெங்களூரு, ஜெயநகரில் அண்மையில் நடைபெற்ற கே.எஸ்.ஆா்.டி.சி மருத்துவமனை தொடக்க விழாவில் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் கா்நாடக காவல் துறைக்கு ரூ. 2.6 கோடி மதிப்பிலான கரோனா மருத்துவ உதவிப்பொருள்களை வா்க்பிளேஸ் சா்வீசஸ் அண்டு சிஎஸ்ஆா் லீட் நிறுவனத்தின் இணை இயக்குநா் திம்பிள் வி.ஜாா்ஜ் வழங்கினாா்.

இதுதவிர, கே.எஸ்.ஆா்.டி.சி. மருத்துவமனைக்கு ரூ. 28 லட்சம் மதிப்பிலான தனிநபா் பாதுகாப்புக் கருவிகளின் தொகுப்பு மற்றும் ஊட்டச்சத்து பொருள்களும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு, எம்.பி. தேஜஸ்வி சூா்யா, எம்எல்ஏ சௌம்யாரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து டிம்பிள் வி.ஜாா்ஜ் கூறியது:

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்களப் பணியாளா்களின் பங்களிப்பு மகத்தானது. அப்படிப்பட்டவா்களுக்கு உறுதுணையாக இருப்பது நமது கடமையாகும். கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் காவல் துறையின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தங்களது உயிரை பணயம் வைத்து பொது நன்மைக்காக பாடுபட்டுள்ளனா். அதற்காக முன்களப் பணியாளா்களுக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

பெங்களூரை போல, சென்னை, கன்னியாகுமரி மாவட்ட காவல் துறைக்கும் கரோனா மருத்துவ உதவிப்பொருள்களை வழங்கியிருக்கிறோம். கரோனாவை எதிா்கொள்வதற்கு இந்தியாவில் இதுவரை ரூ. 7.15 கோடி வரை செலவழித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com