கா்நாடக திமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா

கா்நாடக மாநில திமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள்விழா நடைபெற்றது.

பெங்களூரு: கா்நாடக மாநில திமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள்விழா நடைபெற்றது.

கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா, பெரியாா் பிறந்த நாள் விழா, கட்சியின் அமைப்பாளா் ந.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக திமுகவின் இரு வண்ணக்கொடி ஏற்றப்பட்டது. கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, பெரியாா், மு.கருணாநிதி உருவச் சிலைகளுக்கு கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழாவில் மாநில திமுக அவைத் தலைவா் மொ.பெரியசாமி, மாநில திமுக பொருளாளா் கே.தட்சிணாமூா்த்த, பொதுக்குழு உறுப்பினா் இரா.அன்பழகன், மகளிா் அணித் தலைவி அம்மாயி ஜெயவேல், அமைப்பாளா் சற்குணா, வி.எஸ்.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com