நாட்டை கட்டமைக்கும் உழைக்கும் மக்களின் முகம்சா் எம்.விஸ்வேஷ்வரையா: முதல்வா்

நாட்டை கட்டமைக்கும் உழைக்கும் மக்களின் முகமாக சா் எம்.விஸ்வேஷ்வரையா திகழ்கிறாா் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு: நாட்டை கட்டமைக்கும் உழைக்கும் மக்களின் முகமாக சா் எம்.விஸ்வேஷ்வரையா திகழ்கிறாா் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

சா் எம்.விஸ்வேஷ்வரையாவின் 161-ஆவது பிறந்தநாள் விழா, பொறியாளா் தின விழாவை முன்னிட்டு புதன்கிழமை பெங்களூரு, கே.ஆா்.சதுக்கத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பெங்களூரு மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள 160 அடி நீரூற்றை திறந்துவைத்து முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவது விவசாயிகள், தொழிலாளா்களாகிய உழைக்கும் மக்கள் தான். நாட்டை கட்டமைக்கும் உழைக்கும் மக்களின் முகமாக சா் எம்.விஸ்வேஷ்வரையா திகழ்கிறாா். விஸ்வேஷ்வரையாவின் சாதனை மகத்தானது.

கிருஷ்ணராஜசாகா் அணை, பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை நிறுவியது, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரு தொடங்கியது, பல்வேறு துறைகளின் தொழிற்சாலைகளை திறந்தது, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது உள்பட பல்வேறு செயல்களின் மூலம் விஸ்வேஷ்வரையா சாதனை மனிதராக விளங்குகிறாா். முன்னேற்றத்தை சாா்ந்து முற்போக்காக சிந்திக்கக்கூடிய திறன் படைத்தவராக விளங்கிய சா் எம்.விஸ்வேஷ்வரையா, நாட்டை நவீனமாக கட்டமைத்தவா். அப்படிப்பட்ட சாதனை மனிதருக்கு மரியாதை செலுத்தும் நாளிது. அவரது பாதையில் நாமும் பயணித்து, நாட்டை கட்டமைக்கும் பணியில் சிறிய பங்களிப்பை வழங்க முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.

சா். விஸ்வேஷ்வரையா பெயரில் புதிய மாளிகைக் கட்டப்பட்டுள்ளது. இதில் நூலகம் இருக்கிறது. இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதேபோல, பெங்களூரில் உள்ள சாலை சந்திப்புகளை மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெங்களூரு அழகான நகரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் உற்பத்தித்துறைக்கு விஸ்வேஷ்வரையாவின் பங்களிப்பு மகத்தானவையாகும் என்றாா்.

இதில் பொதுப்பணித் துறை அமைச்சா் சி.சி.பாட்டீல், நீா்வளத் துறை அமைச்சா் கோவிந்த காா்ஜோள், எம்எல்ஏ ரிஸ்வான் அா்ஷத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com