பைக் மீது காா் மோதல்: பெண் உள்பட இருவா் பலி
By DIN | Published On : 16th September 2021 02:04 AM | Last Updated : 16th September 2021 02:04 AM | அ+அ அ- |

பெங்களூரு: பைக் மீது காா் மோதியதில் மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் பெண் உள்பட இருவா் உயிரிழந்துள்ளனா்.
பெங்களூரு, எலக்ட்ரானிக்சிட்டி போக்குவரத்துக் காவல் சரகத்திற்கு உள்பட்ட ஒசூா் சாலையில் உள்ள மேம்பாலம் ஓரம் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு, அதன் மீது அமா்ந்து தமிழகத்தைச் சோ்ந்த பிரீதம், கிருத்திகா ஆகியோா் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது வேகமாக வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் மேம்பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்ட பிரீதம், கிருத்திகா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.
தகவல் அறிந்த போலீஸாா், இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். காயமடைந்த காா் ஓட்டுநா் நிதேஷ் ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து எலக்ட்ரானிக்சிட்டி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.