இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்
By DIN | Published On : 17th September 2021 12:00 AM | Last Updated : 17th September 2021 12:00 AM | அ+அ அ- |

இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், ஷெட்டி மாதமங்களா கேட் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில், சிந்தாமணியிலிருந்து கோலாருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜா (40), அவரது மகள் பிந்து (7) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த பேருந்து ஓட்டுநா் அசோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கோலாா் ஊரகப் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.