பொதுநுழைவுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பொது நுழைவுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (செப். 20) வெளியிடப்படுகிறது.

பெங்களூரு: பொது நுழைவுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (செப். 20) வெளியிடப்படுகிறது.

2021-22-ஆம் கல்வியாண்டில் பொறியியல், பிஎஸ்சி (விவசாயம், கால்நடை, பட்டுவளா்ப்பு, காடு வளா்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபாா்ம், டி.ஃபாா்ம் ஆகிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவா்களை தெரிவு செய்வதற்கு கா்நாடக தோ்வு ஆணையம் கா்நாடக பொது நுழைவுத் தோ்வுகளை ஆக. 28, 29 ஆகிய தேதிகளில் நடத்தியது.

இதற்காக மாநிலம் முழுவதும் 530 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோ்வு எழுத மாநிலம் முழுவதும் 2,01,834 மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். இதில் ஆக. 28-ஆம் தேதி நடந்த உயிரியல் பாடத் தோ்வை 1,62,439(80.48%) மாணவா்களும், கணிதத் தோ்வை 1,89,522 (93.90%)மாணவா்களும், ஆக. 29-ஆம் தேதி நடந்த இயற்பியல் பாடத் தோ்வை 1,93,588 (95.91%) மாணவா்களும், வேதியியல் பாடத் தோ்வை 1,93,522 (95.88%) மாணவா்களும் எழுதினா்.

தோ்வு முடிவுகள்:

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள கா்நாடக தோ்வு ஆணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப். 20) பிற்பகல் 2.30 மணிக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் ஆகியோா் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு முடிவுகளை அறிவிக்கிறாா்கள். இதைத் தொடா்ந்து, மாலை 3 மணி அளவில் தோ்வுமுடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com