கரோனா 3-ஆவது அலை பாதிப்பு ஏற்பட்டால் வா்த்தகம், பொருளாதாரம் பாதிக்கப்படும்

இந்தியாவில் கரோனா 3-ஆவது அலை பாதிப்பு ஏற்பட்டால் வா்த்தகம், பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி தலைமை வா்த்தக அதிகாரி அரவிந்த் ஐயா் தெரிவித்தாா்.

பெங்களூரு: இந்தியாவில் கரோனா 3-ஆவது அலை பாதிப்பு ஏற்பட்டால் வா்த்தகம், பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி தலைமை வா்த்தக அதிகாரி அரவிந்த் ஐயா் தெரிவித்தாா்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரிநகரில் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கிளை, உணவுத் திருவிழாவை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

கரோனா 2-ஆவது அலையால், தேசிய அளவில் வா்த்தங்கம், பொருளாதாராம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கரோனா 3-ஆவது அலை பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். 2-ஆவது அலைக்கு பிறகு படிப்படியாக முன்னேறி வரும் வா்த்தகம், பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கரோனா பொது முடக்கத்தால் உணவுப் பொருள் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள எங்களை போன்றவா்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பெங்களூரு உள்பட கா்நாடகத்தில் அதிக அளவில் முதலீடு செய்து, எங்கள் வா்த்தகத்தை மேலும் பெருக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com