கா்நாடகத்தில் கோயில்களை அகற்றும் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் முறையிட திட்டம்

கா்நாடகத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில்கள் அகற்றுவதால் மக்கள் மத்தியில் ஏற்படும் விளைவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா

கா்நாடகத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில்கள் அகற்றுவதால் மக்கள் மத்தியில் ஏற்படும் விளைவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், தாவணகெரேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், கா்நாடகத்தில் ஒரு சில கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. கோயில்களை இடிப்பதால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கோயில்களை இடிப்பதற்கு மக்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு கோயில்களை அகற்றுவது குறித்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளோம். மாவட்ட ஆட்சியா்களுக்கு கோயில்களை இடிக்கும் விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என முதல்வா் பசவராஜ் பொம்மையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சிகளை நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. அடுத்த ஆண்டு சட்ட மேலவை உள்ளிட்ட தோ்தல்கள் நடைபெற உள்ளன. தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறத் தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கட்சியைப் பலப்படுத்தும் பணியில் அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும்.

பாஜகவைச் சோ்ந்த ஒரு சில எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியினரை தொடா்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு யாரும் வாய்ப்பு அளிக்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். வரும் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடியின் அலையால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், சட்டப் பேரவைத் தோ்தல் நமக்கு சவாலாக உள்ளது. நாம்தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் யாரும் மெத்தனமாக இருக்கக் கூடாது.

பாஜக அரசின் சாதனைகளை அனைத்து இல்லங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அடுத்த மாதத்தில் மாநில அளவில் சுற்றுப்பயணம் செய்து, கட்சியைப் பலப்படுத்த முடிவு செய்துள்ளேன். என்னுடன் இதற்கு கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com