3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா் வசதி: கா்நாடக அமைச்சா் ஈஸ்வரப்பா

அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எச்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எச்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை மஜத உறுப்பினா் கே.ஏ.திப்பேசாமியின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:

மாநில அளவில் உள்ள கிராமங்களில் 97.91 லட்சம் வீடுகள் உள்ளன. அதில் 28.15 லட்சம் வீடுகளுக்கு 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில அளவில் மொத்தமாக 34.90 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற வீடுகளுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலம் குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும். தேசிய குடிநீா் திட்டத்தில் 55 எல்பிசிடி தண்ணீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குழாய் இணைப்புகள் வழங்க ரூ. 11,010 கோடியும், குடிநீா் விநியோகம் செய்ய ரூ. 30.790 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு ஆக. 15-ஆம் தேதி முதல் தேசிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில் உள்ள நதிகளிலிருந்தும், தண்ணீா் கிடைக்கும் பகுதிகளிலிருந்தும் குடிநீரைக் கொண்டு வந்து, கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com