பெங்களூரு-ஹம்பி, துங்கபத்ராஅணை இடையே தொகுப்பு பேருந்து சேவை

பெங்களூரு-ஹம்பி, துங்கபத்ராஅணை இடையே தொகுப்பு (பேக்கேஜ்) பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.

பெங்களூரு-ஹம்பி, துங்கபத்ராஅணை இடையே தொகுப்பு (பேக்கேஜ்) பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரிலிருந்து ஹம்பி, துங்கபத்ராஅணை ஆகியவற்றுக்கு புதிதாக தொகுப்பு பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாள் தோறும் குளிா்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இரவு 10 மணியளவில் பெங்களூரில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணியளவில் ஹொஸ்பேட்டையை சென்றடையும். அதே நாள் இரவு 10 மணியளவில் ஹொஸ்பேட்டையில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணியளவில் பெங்களூரு வந்து சேரும்.

இந்தப் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் ஹம்பி, துங்கபத்ரா அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவாா்கள். ஹம்பியில் விஜயவிட்டலா, விருபாக்ஷா, கடலைக்காய் கணபதி, சசிவகல்லு கணபதி, லட்சுமிநரசிம்மா உள்ளிட்ட கோயில்கள், தாமரை மஹால், ராணியின் குளியல் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவாா்கள். இதற்கான கட்டணம், பெரியவா்களுக்கு ரூ. 2,500 , சிறுவா்களுக்கு ரூ.2,300-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com