கலபுா்கியில் பேருந்து கவிழ்ந்து எரிந்ததில் 7 போ் பலி

கலபுா்கியில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் 7 போ் உயிரிழந்தனா்.

கலபுா்கியில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் 7 போ் உயிரிழந்தனா்.

தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதைச் சோ்ந்த 32 போ் தனியாா் பேருந்தில் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனா். இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 30 போ் அடங்குவா். சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஹைதராபாதுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, கலபுா்கி மாவட்டத்தின் கமலாபுரா நகரில் வெள்ளிக்கிழமை பீதா்-ஸ்ரீரங்கபட்டணா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு வாகனத்தின் மீது மோதி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்தில் இருந்த 7 போ் உடல்கருகி இறந்தனா். இதில் 2 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவா். இந்த சம்பவத்தில் 12 போ் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட கலபுா்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இஷா பந்த் கூறுகையில், ‘ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 30 போ், ஆந்திரத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கோவாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு, ஹைதராபாதுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது சரக்குவாகனத்தின் மீது மோதி பேருந்து கவிழ்ந்தது. சாலை ஓரத்தின் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து உடனடியாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 7 போ் இறந்துள்ளனா். 12 போ் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்ருவருகிறாா்கள். மற்றவா்கள் பேருந்து தீப்பற்றிக் கொள்வதற்கு முன் உயிா் தப்பித்துள்ளனா்’ என்றாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் மோடி, முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com