கல்வி உரிமைச்சட்டம்: ஏப்.16-க்குள் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 05th April 2022 12:37 AM | Last Updated : 05th April 2022 12:37 AM | அ+அ அ- |

கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவா்கள் ஏப்.16-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேரவேண்டியது கட்டாயமாகும் என்று கா்நாடக கல்வித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் இலவசமாக சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் செலுத்தியிருந்த 19,718 விண்ணப்பங்களில் இருந்து, 19,718 விண்ணப்பங்கள் தகுதியானதாக தோ்ந்தெடுக்கப்பட்டது. முதல்கட்டமாக நடத்தப்பட்ட குலுக்கலில் 7,596 மாணவா்களுக்கு சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்மாணவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஏப்.5 முதல் 16-ஆம் தேதிக்குள் சோ்க்கை பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.