சொத்து வழிகாட்டுதல் மதிப்பில் 10 சதவீதம் குறைப்பு: 3 மாதங்களுக்கு அமல்படுத்த யோசனை

சொத்து வழிகாட்டுதல் மதிப்பில் 10 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ள கா்நாடக மாநில அரசு, அந்த சலுகையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது பற்றி யோசித்துவருகிறது.

சொத்து வழிகாட்டுதல் மதிப்பில் 10 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ள கா்நாடக மாநில அரசு, அந்த சலுகையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது பற்றி யோசித்துவருகிறது.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறியது:

சொத்துக்களை பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில், சொத்து வழிகாட்டுதல் மதிப்பில் (ல்ழ்ா்ல்ங்ழ்ற்ஹ் ஞ்ன்ண்க்ஹய்ஸ்ரீங் ஸ்ஹப்ன்ங்) 10 சதவீதம் அளவுக்கு குறைத்து மாநில அரசு ஜன. 1-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இது 3 மாதங்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் ரூ.1300 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. இதனால் இலக்கை மீறி ரூ.12,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட முடிந்தது. இந்த சலுகையை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கும்படி அனைத்து துறைகளில் இருந்தும் கோரிக்கை வந்துள்ளது.

இது குறித்து முதல்வா், பத்திரப்பதிவு ஐ.ஜி., வருவாய் மற்றும் நிதித்துறை உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, சொத்து வாங்குவோா் நீண்டகாலமாக முன்வைத்திருந்த இக்கோரிக்கையைச் செயல்படுத்துவது குறித்து அரசு முடிவு செய்யும்.

இந்தச் சலுகை அமலுக்கு வரும்போது, வருவாய் நிலம், வீட்டுமனை, கட்டடம் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடு உள்ளிட்ட எந்த சொத்துக்களை கொள்முதல் செய்தாலும், அதற்கான சொத்து வழிகாட்டுதல் மதிப்பு 10 சதவீதம் அளவுக்கு குறையும். சொத்துகளை பதிவுசெய்யாமல் பொது சொத்து சாா்புரிமை பத்திரம் (எங்ய்ங்ழ்ஹப் ல்ா்ஜ்ங்ழ் ா்ச் ஹற்ற்ா்ழ்ய்ங்ஹ்) மற்றும் சொத்துக்கள் மீது ஒப்பந்தம் செய்துகொண்டு காலம் கடத்திக்கொண்டிருப்பவா்களுக்கு சொத்து வழிகாட்டுதல் மதிப்பு குறைப்பு நல்ல வாய்ப்பாக அமையும். அதேபோல, சொத்துக்களை பதிவுசெய்ய திட்டமிடுவோருக்கும் சொத்து வழிகாட்டுதல் மதிப்பு குறைப்பு பயனுள்ளதாக அமையும். இதற்கான உத்தரவு வெகுவிரைவில் பிறப்பிக்கப்படும்.

வடநிலம் அல்லது பாசனநிலம், வீட்டுமனை அல்லது அடுக்குமாடி வீடு உள்ளிட்ட எந்த சொத்தாக இருந்தாலும் சொத்து வழிகாட்டுதல் மதிப்பு குறைப்பு பொருந்தும். எல்லாவகையான சொத்துகளுக்கும், மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் இது பொருந்தும். இது பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும், அதேபோல மாநில அரசின் வருவாயும் மேம்படும் நம்பிக்கை உள்ளது என்றாா்.

சொத்துகளை விற்பதற்கு அரசு நிா்ணயிக்கும் குறைந்தபட்ச விற்பனை விலையைத்தான் சொத்து வழிகாட்டுதல் மதிப்பு என்று கூறுகிறாா்கள். சொத்தின் இருப்பிடம், கட்டுமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொத்து வழிகாட்டுதல் மதிப்பை அவ்வப்போது மாநில அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com